loader

அக்னி கர்மம் எனப்படுவது ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் சத்திர சிகிச்சை சார்ந்த தீய்தலை உருவாக்கும் ஒரு சிகிச்சை முறையாகும். இங்கு சூடாக்கப்பட்ட பஞ்ச உலோகத்தினாலான கருவி மூலம் வெப்பம் ஆனது பிரயோகிக்கப்படும்.

பல வித மருந்துகளால்க் குணப்படுத்த முடியாத பல நோய்களையும் தீர்த்திட வல்லது இவ் அக்னி கர்மம் ஆகும். அக்னி கர்மத்தின் முக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால், இது இயற்கையாகவே கிருமி நீக்கும் தன்மை மற்றும் இச் செயன்முறையின் போது உருவாகும் தடங்களில் அதன் தீய்தல் குணத்தின் காரணமாக தொற்றுக்கள் ஏற்படமாட்டாது.

அக்னி கர்மமானது பிரயோகிக்கப்படும் பகுதி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் பொருட்களைப் பொருத்து அது வகைப்படும். இவ் வகைகளானது நோயாளி மற்றும் நோயின் அடிப்படையில்த் தெரிவு செய்யப்படும்.

இது பூர்வ கர்மம், பிரதான கர்மம் மற்றும் பஸ்யாத் கர்மம் போன்ற மூன்று படிநிலைகளைக் கொண்டது. இங்கு பூர்வ கர்மத்தில் நோயாளிக்கு அக்னி கர்மம் செய்யும் படிமுறை ஆனது புரிய வைக்கப்படும். அதன் பின்னர் அக்னி கர்மம் செய்ய இருக்கும் பகுதி ஆனது மருத்துவ க்வாதம் அல்லது வேறு இயற்கை சுத்திகரிப்புத் திரவங்கள் ஏதும் பயன்படுத்தி சுத்தம் செய்யப்படும். இதன் பின்னர் பிரதான கர்மம் ஆனது மேற்கொள்ளப்படும். பிரதான கர்மத்தில் நன்கு சிகக்கும் வரை பஞ்ச உலோகத்தினாலான கருவி ஒன்று சூடாக்கப்பட்டு, வெப்பம் பிரயோகிக்கப்பட வேண்டிய இடத்தில் குறிப்பிட்ட நேர இடைவெளியில், பொருத்தமான அமைப்பில் சூடு வைக்கப்படும். இதனைத் தொடர்ந்து பஸ்யாத் கர்மம் மேற்கொள்ளப்படும். இதில் சூடு வைக்கப்பட்ட இடத்தில் மருத்துவ களி / மருத்துவ சூரணம் போன்றவை பூசப்படும். தேவைக்கு ஏற்ப கட்டு கட்டப்படும்.

அக்னி கர்மமானது பொதுவாக மூல நோய், காலில் ஏற்படும் ஆணி, குடலிறக்கம், சயட்டிக்கா, உறைந்த தோல்ப்பட்டை, தேவையற்ற தசை வளர்ச்சி, மருக்கள் போன்ற நோய்களிற்காகப் பரிந்துரைக்க முடியும். பித்த தோசம் மற்றும் ரக்த தோசத்தினால் உருவாக்கப்பட்ட நோய்கள், சிறுவர்கள், முதியோர், உடல் வலிமை குறைந்தோர், நீராவி / ஒத்தடம் சிகிச்சைகளுக்குத் தகுதி அற்றோர்களிற்கு இவ் அக்னி கர்ம சிகிச்சையினைப் பரிந்துரைக்க முடியாது.

ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் சிறந்த சிகிச்சையான அக்னி கர்மத்தின் மூலம் இன்றே பல நோய்களையும் தீர்த்திடுவோம்.

Leave a Reply