loader

இன்றைய காலகட்டத்திலே உயர் இரத்த அழுத்தம் என்பது பெரிதும் ஒரு சவாலான நோயாகவே திகழ்கின்றது. உயர் இரத்த அழுத்தம் எனப்படுவது யாதெனில், இரத்த அழுத்தமானது அதன் சராசரி அளவை விட அதிகரித்தல் ஆகும். இதனை அளப்பதற்கு சிஸ்டோலிக் அழுத்தம் மற்றும் டயஸ்டோலிக் அழுத்தம் எனப்படும் இரண்டு அளவீடுகள் கணிக்கப்படும். இங்கு சிஸ்டோலிக் அழுத்தமானது 100-130 mmhg இற்குள்ளும், டயஸ்டோலிக் அழுத்தமானது 60-80 mmhg இற்குள்ளும் காணப்பட வேண்டும். இவ் அளவுகளை விட இரத்த அழுத்தமானது அதிகரிக்கும் போது அது உயர் இரத்த அழுத்தமாக கூறப்படும். இதன் பொழுது குருதி நாளங்களில் அதிகளவு அழுத்தம் உணரப்படும்.

உயர் இரத்த அழுத்தமானது பல காரணிகளால் ஏற்படக்கூடியது. அதில்ப் பரம்பரைக் காரணிகளும் ஒன்றாகும். மேலும், நமது உணவுப் பழக்கவழக்கங்கள், வயது, பால், சுற்றாடல்க் காரணிகள், மன நிலைகள் சில நோய் நிலமைகள் என்பனவும் தாக்கம் செலுத்துகின்றன . அதிகளவு உப்பு சேர்க்கப்பட்ட உணவுகள், அதிக எண்ணெய் அடங்கிய உணவுகள், உடற்பயிற்சி போதாமை, மது மற்றும் சிகரெட் பாவனை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் அதிக இரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.

இவ் நோய் நிலமையின் போது பொதுவாகத் தலை இடி, தலை சுற்று, மயக்கம், கண் பார்வை மங்குதல், காதுகளில் இரைச்சல் போன்றவை ஏற்படலாம். மேலும் அதிக இரத்த அழுத்தமானது பக்கவாதம், இருதய செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற பாரிய நிலைமைகளையும் ஏற்படுத்தக் கூடியது. எனவே, உரிய நேரத்தில் உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிவதென்பது மிக முக்கியமாகின்றது. பொதுவாக 30 வயதிற்கு மேல் சீரான பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தை அதன் ஆரம்ப கட்ட த்திலேயே கண்டறிய முடியும்.

ஒரு நோயானது வரும் முன் காப்பதென்பதும் முக்கியமாகின்றது அதே சமயத்தில், நோய் வந்த பின்பு அது தீவிரமடையாமல் அதற்குறிய பாதுகாப்பு வழிமுறைகளை நாம் பின்பற்ற வேண்டும். அந்த வகையில் உப்பு மற்றும் எண்ணெய் குறைந்த நிறை உணவுகளை எடுத்தல் வேண்டும். மேலும் இயன்றளவு உள்ளி, கொடித்தோடை இலை, எலுமிச்சை, சிறிய மீன்கள், பூசணி விதை, கீரைகள் என்பவற்றை அதிகம் நமது அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும். மது மற்றும் சிகரெட்டின் பாவனையைத் தவிர்த்திட வேண்டும். இவற்றைத் தவிர மன அமைதி பேணிட வேண்டும். இதற்காக தியானம், மெல் இசைகளைக் கேட்டல் போன்றவற்றில் ஈடுபடலாம்.

ஆயுர்வேத மருத்துவ முறையானது உள்ளக மற்றும் வெளியக சிகிச்சை முறைகள் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய பல சிகிச்சை முறைகளைக் கொண்டுள்ளது. பஞ்ச கர்ம எனப்படும் சிகிச்சை முறைகள் மூலம் நமது உடலை உட்புறத்திலிருந்து சுத்தி செய்து உடலின் செயற்பாடுகளை ஒரு சீரமைப்பிற்குக் கொண்டு வர முடியும். மேலும் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய பல தரப்பட்ட இயற்கையான மூலிகைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட கசாயங்கள், வட்டி, சூரணம், கல்கம், குளி போன்ற உள்ளக மருந்துகளும் உள்ளன . உடனடி நிவாரணம் தர வல்ல எண்ணெய்களின் பாவனையும் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் உண்டு. இவற்றைத் தவிர , உடல் மற்றும் மனதினை சீர்ப்படுத்த வல்ல யோகா, ப்ராணாயாமம், சுவாசப் பயிற்சிகள் என்பனவும் உள்ளன . இவ் அனைத்து ஆயுர்வேத சிகிச்சை முறைகளுமே எவ்வித பாதகமான விளைவுகள் அற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, அதிக இரத்த அழுத்தத்தை ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் இன்றே கட்டுப்படுத்திடுவோம்.

Leave a Reply