loader

நசியம் எனப்படுவது யாதெனில், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளில்ப் பயன்படுத்தப்படும் ஒரு வித பஞ்ச கர்ம சிகிச்சை முறை ஆகும். இது குறிப்பிட்ட மருந்துகளை மூக்குத் துவாரங்களின் மூலம் உட்செலுத்தும் முறை ஆகும்.

இது பொதுவாக தலைப் பகுதியில் ஏற்படும் தோசங்களின் சமனிலைக் குழப்பத்தினை ஈடு செய்யவே பயன்படுத்தப்படும். இவ் நசியத்தின் மூலம் தலைப் பகுதி ஆனது உள்ளிருந்து சுத்திகரிக்கப்படும். இதன் மூலம் தலைப் பகுதி ஆனது ஒரு சமனிலைக்கு வரும்.

நசியத்தில் பல வகைகள் உள்ளன. இவை நோய் மற்றும் நோயாளியிற்கு ஏற்ப தீர்மானிக்கப்படும். அத்துடன் இங்கு பயன்படுத்தப்படும் மருந்து மற்றும் அதன் அளவு என்பனவும் நோய் மற்றும் நோயாளியிற்கு ஏற்ப மாறுபடும். பொதுவாக நசியம் ஆனது 7 தொடக்கம் 14 நாட்கள் வரையில் மேற்கொள்ளப்படும். காலநிலைகளும் நசிய சிகிச்சையில்த் தாக்கம் செலுத்துகின்றது.

நசியம் செய்யும் பொழுது முதலில் தோள் மற்றும் தலைப் பகுதிக்கு மருத்துவ எண்ணெய் பூசப்பட்டு ஒத்தடம் கொடுக்கப்படும். இதன் பின்னரே நசியம் மேற்கொள்ளப்படும். இங்கு சிகிச்சை பெறுபவர் முதலில் வசதியான இருக்கையில் அமர்ந்த படி அல்லது படுத்தவாறு அமர்த்தப்படுவார். அதன் பின்னர் எண்ணெய் பூசுதல் மற்றும் ஒத்தடம் என்பன மேற்கொள்ளப்பட்டு அதனைத் தொடர்ந்து நசியமும் மேற்கொள்ளப்படும். நசியம் செய்யப்பட்ட நிலையில் மூக்குத் துவாரங்களில் இடப்பட்ட மருந்தினை நன்றாக உள்ளெடுக்க வேண்டும். சிகிச்சை பெறுபவரிற்குத் தொண்டையினுள் இடப்பட்ட மருந்து வருவது போன்ற உணர்வு ஏற்படுமாயின் நன்றாக காறி உமிழ்நீரை வெளியேற்ற முடியும். அதன் பின்னர் பூசப்பட்ட எண்ணெயினை நன்றாக ஒத்தி அகற்றிட வேண்டும். நசியத்தின் இறுதிப் பகுதியில் சிகிச்சை பெறுபவரிற்கு சுடு நீரினால் வாய் அலசக் கொடுப்பதுடன் மருத்துவ புகைப் பிடித்தலையும் மேற்கொள்ளலாம்.

இது பலவித தலைவலி, கண், காது, மூக்கு போன்றவற்றில் ஏற்படும் பிரச்சினைகள், தலைமுடி பிரச்சனைகள், சுவாச பிரச்சனைகள், நரம்பு சார்ந்த பிரச்சனைகள், பீனிச குணம், முகவாதம், மன நிலைக் குழப்பங்கள், தூக்கத்தில்க் காணப்படும் கோளாறுகள், போன்ற பல பிரச்சினைகளிற்கு தீர்வு அளிக்கக் கூடியது. எனினும் நசியம் ஆனது கர்ப்பிணித் தாய்மார்கள், சமிபாட்டு கோளாறு போன்றவை உடையோர்களிற்கு பொருத்தம் அற்றது.

பஞ்ச கர்ம சிகிச்சைகளுள் ஒன்றான நசியத்தின் மூலம் இன்றே பலவித பிரச்சனைகளிற்குத் தீர்வு கண்டிடுவோம்.

Leave a Reply