loader

நவீன காலத்தில்ப் பலரும் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு பிரச்சனையே மலட்டுத் தன்மை ஆகும். பொதுவாக இனப்பெருக்கத் தொகுதியில்க் காணப்படும் கோளாறுகள் அல்லது இனப்பெருக்கத் தொகுதி சார்ந்த நோய்களினால் இவ் மலட்டுத் தன்மை ஏற்படுகின்றது. மலட்டுத் தன்மை என்பது யாதெனில், கருத் தடை முறைகள் எதுவும் பயன்படுத்தாது, ஒரு வருட கால ஒழுங்கான உடலுறவின் பின்னரும் கருத்தரிக்க முடியாது இருத்தல் ஆகும். இங்கு கோளாறு ஆனது ஆண் அல்லது பெண்ணில்க் காணப்படலாம். சில வேளைகளில் இருவரிலும் காணப்படலாம். ஆரோக்கியமான கருத்தரிப்பிற்கு, ஆண்மைக் காரணிகள் மற்றும் பெண்மைக் காரணிகள் என்பன ஆரோக்கியமாக இருத்தல் அவசியமாகும். இவற்றைத் தவிர காலம் மற்றும் போதியளவு ஊட்டச்சத்து என்பனவும் அவசியமாகின்றது. கருமுட்டை, விந்து என்பன பொருத்தமான நேரத்தில் போதியளவு ஊட்டச்சத்து கிடைக்கும் பொழுது அது ஒரு உயிராக உருவெடுக்கின்றது. இதில் ஒரு காரணியேனும் பாதிக்கும் பட்சத்தில் அங்கு கருத்தரிப்பு நிகழமாட்டாது.

ஆண் சம்பந்தப்பட்ட காரணிகளாக ; விந்தணுக்களில்க் காணப்படும் குறைபாடுகள் (அமைப்பு, செறிவு, உந்து சக்தி போன்றவை), ஆண் பிறப்பு உறுப்பின் வளர்ச்சிக் குறைபாடு, ஹோர்மோண்களின் சமனிலை மாற்றங்கள், உடம்பில்க் காணப்படும் நோய்களின் தாக்கங்கள், சில மருந்துகளின் பாவனை, கதிர் வீச்சு, பரம்பரைக் காரணிகள் என்பன அடங்கும். பெண் சார்ந்த காரணிகளாக ; கருத்தரிக்க உகந்த காலம் பற்றிய அறிவின்மை, இனப்பெருக்கத் தொகுதியில்க் காணப்படும் குறைபாடுகள், கரு முட்டையின் வளர்ச்சிக் குறைபாடு, கரு முட்டை வெளியேறுவதில்க் காணப்படும் குறைபாடுகள், வயது, அதிக உடற் பருமன் அல்லது உடல் எடை குறைவு, பலோப்பியன் குழாயில் அடைப்புகள் காணப்படல், தைரொய்ட் பிரச்சனைகள் போன்ற உடலில்க் காணப்படும் நோய்கள், ஹோர்மோண்களின் சமனிலை மாற்றங்கள், சில மருந்துகளின் பாவனை, பரம்பரைக் காரணிகள் என்பன அடங்கும்.

மலட்டுத் தன்மை ஆண் சம்பந்தப்பட்டதா இல்லை பெண் சம்பந்தப்பட்டதா என்பதை அறிவதற்கு ஆணில் விந்தணு பரிசோதனையும், பெண்களில் ஹொர்மோண்கள் பரிசோதனை மற்றும் ஸ்கான் என்பவற்றை வைத்து அறிந்து கொள்ளலாம்.

மலட்டுத் தன்மைக்கான சிறந்த தீர்வினை ஆயுர்வேதம் பல நூற்றாண்டு காலமாக வழங்கி வருகின்றது. ஆண் மற்றும் பெண் இருபாலரிற்கும் அவர்களது குறைபாடுகளிற்கேற்ப தனித்தனியே பலவித சிகிச்சைகள் உண்டு. இதில் உள்ளக மற்றும் வெளியக சிகிச்சைகளும் காணப்படுகின்றன . உள்ளக சிகிச்சைகளாக ஆஸவம், அரிஸ்டம், கசாயம், க்வாதம், சூரணம், குளி, வட்டி, கல்கம், க்ரிதம் என்பன காணப்படுகின்றன. பஞ்ச கர்ம சிகிச்சைகள் (நசியம், வஸ்தி போன்றவையும்) எனப்படும் வெளியக சிகிச்சை முறை உடலை சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படுகின்றது. இது தவிர , யோனி பிச்சு, யோனி ப்ரக்சாலன , யோனி பரிஸேக்க போன்ற வெளியக சிகிச்சைகளும் உண்டு. 

இவ் சிகிச்சைகளைத் தவிர கருத்தரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை நாம் மேலும் உருவாக்கிவிட வேண்டும். பெண்களில் கருத்தரிப்பிற்கான முக்கியமான காரணி முதிர்ந்த முட்டை ஆதலால், அது வெளிவிடப்படும் நேரம் பார்த்து உடலுறவு கொண்டாலே அங்கு கருத்தரிப்பு நிகழும். பெரும்பாலானோரிற்கு கருமுட்டை வெளிவிடப்படும் நேரம் பற்றிய அறிவின்மையே பெரும்பாலும் குழந்தை இன்மையிற்குக் காரணமாக அமைகின்றது. பொதுவாகக மாதவிடாய் ஏற்படுவதற்கு 14 நாட்களிற்கு முன்னரே கருத்தரிப்பிற்கு உகந்த காலமாகக் கருதப்படும். இங்கு கருமுட்டையானது 14 அல்லது 13 அல்லது 12 வது நாள் வெளிவிடப்படும். எனவே, இக் காலப்பகுதியில் உடலுறவில் ஈடுபடுவதன் மூலம் கருத்தரிப்பதற்கான சாத்தியக் கூறுகள் அதிகரிக்கின்றன. இதனுடன் நெய், நல்லெண்ணெய், எள்ளு, உழுந்து போன்றவற்றை அதிகம் நமது உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றைத் தவிர , மாலை வேளைகளில் நீராடல், பகல் வேளைகளில் உறக்கம், கதிர்வீச்சு, அதிக வெப்பமான இடங்களில் நிற்பது போன்றவற்றைத் தவிர்த்தல். இவற்றுடன் மன அமைதியைப் பேணுதல் மிக முக்கியமானதாகும். இவை அனைத்தையும் கடைப்பிடிப்பதன் மூலம் ஆரோக்கியமான உயிர் ஒன்றினை உருவாக்கிட முடியும்.

எனவே, ஆயுர்வேதத்துடன் இன்றே நமது சந்ததியை விருத்தி செய்திடுவோம்!!

Leave a Reply