loader

ரக்த மோக்சண எனப்படுவது யாதெனில், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளில்ப் பயன்படுத்தப்படும் ஒரு வித பஞ்ச கர்ம சிகிச்சை முறை ஆகும். இது பாதிக்கப்பட்ட அல்லது கெட்டுப் போன குருதியினை வெளியேற்றுவதற்காகவே பெரும்பாலும் செய்யப்படுகின்றது.

ஐந்து விதமான முறைகளைப் பயன்படுத்தி இங்கு குருதி ஆனது வெளியேற்றப்படும். ரக்த மோக்சணத்தின் முறை நோயாளியின் நோய் மற்றும் தோச நிலைக்கு ஏற்ப மாறுபடும். ப்ரச்சண்ண எனும் முறையில், குறித்த ஒரு இடத்தில் பல கீறல்கள் உருவாக்கப்பட்டு அதன் மூலம் அசுத்தமான குருதி ஆனது வெளியேற்றப்படும். சிரா வேதணம் எனப்படும் அடுத்த முறையில் குருதி நாளங்களில்த் துளைகளை ஏற்படுத்துவதன் மூலம் அசுத்தமான குருதி ஆனது வெளியேற்றப்படும். மற்றுமோர் முறையான சிரிங்கா வினில், மாட்டுக் கொம்பின் மூலம் அசுத்தமான குருதி ஆனது வெளியேற்றப்படும். இம் முறை ஆனது குறிப்பாக , உணர்ச்சி அற்ற இடங்களில்ப் பிரயோகிக்கப்படும். அலாபு எனப்படும் முறையில் அலாபு எனப்படும் ஒருவித மரக்கறி பயன்படுத்தப்படும். ஜலௌகாசரண எனப்படும் ஐந்தாவது முறையில், மருத்துவ அட்டையினைப் பயன்படுத்தி அசுத்தமான குருதி ஆனது அகற்றப்படும்.

இங்கு உள்ள அனைத்து முறைகளுமே, பூர்வ கர்மம், பிரதான கர்மம் மற்றும் பஸ்யாத் கர்மம் எனும் மூன்று படிநிலைகளை உள்ளடக்கி இருக்கும். இதில் பூர்வ கர்மத்தில் நோயாளி மற்றும் குருதியினை வெளியேற்றப் பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பன ஆயத்தம் செய்யப்படும். குறிப்பாக மருத்துவ அட்டை பயன்படுத்தப்படும் முறையில் பயன்படுத்தப்படும் அட்டையானது அகச் சுத்தி மற்றும் புறச் சுத்திக்கு உட்படுத்தப்படும். பூர்வ கர்மத்தின் பின்னர் தொடர்வது பிரதான கர்மம் ஆகும். இங்கு பிரதான கர்மமான அசுத்தமான குருதி வெளியேற்றப்படும். அதன் பின்னர் பஸ்யாத் கர்மத்தில் குருதி வெளியேற்றப்பட்ட இடத்திற்குத் தேவையான மருந்து அல்லது கட்டு கட்டப்படும். இவற்றிற்கு மேலாக மருத்துவ அட்டை பயன்படுத்தப்படும் முறையில் பயன்படுத்தப்பட்ட அட்டையானது சுத்திகரிப்பிற்கு உட்படுத்தப்படும்.பெரும்பாலும் கெட்டுப் போன குருதியினால் ஏற்படக் கூடிய நோய்களிற்கு சிறந்த தீர்வாகும். குறித்த ஓர் இடத்தில் அல்லது முழு உடலிலும் இவ் சிகிச்சை முறையினை மேற்கொள்ள முடியும்.

இவ் ரக்த மோக்சண ஆனது நாள்பட்ட தோல் வியாதிகள், அதிக வீக்கம், தோலில் ஏற்படும் நிற மாற்றங்கள், தலைவலி, பருக்கள், கண் வியாதிகள், கட்டிகள், நாள்பட்ட காயங்கள், வெரிகோஸ் பிரச்சனைகள் போன்றவற்றிற்கு சிறந்த தீர்வை அளிக்கக் கூடியது. கர்ப்பிணித் தாய்மார்கள், இச் சிகிச்சை முறைக்குப் பயந்தவர்கள், தீவிரமான ஆஸ்துமா, குருதிச் சோகை உடையவர்கள், இருதய கோளாறுகள் உடையோரிற்கும், வமணம், விரேசணம், வஸ்தி போன்ற சோதனை சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்ட உடனும் இவ் ரக்த மோக்சணத்தினை செய்யக் கூடாது.

பல நோய்களிற்கும் தீர்வளிக்கக் கூடிய ரக்த மோக்சணத்தின் மூலம் இன்றே பல நோய்களிற்கும் தீர்வு பெற்றிடுவோம்.

Leave a Reply