loader

கால்களின் அழகைக் கெடுக்கக் கூடிய , பலரும் அவர்களது நடுத்தர வயதினில் எதிர்கொள்ளும் பொதுவான ஒரு சவாலே வெரிகோஸ் வெயின் ஆகும். வெரிகோஸ் வெயின் எனப்படுவது யாதெனில், குருதியைக் கடத்தும் நாளங்களில் ஏற்படும் புடைப்புத் தன்மை அல்லது பருத்து வீங்கிய தன்மை ஆகும். இது உடலின் எப் பாகத்திலும் ஏற்படக் கூடியது எனினும், கால்களிலேயே பொதுவாகக் காணப்படும். வெரிகோஸ் வெயினில் ஏற்படுத்தப்படும் அதிக அழுத்தம் அல்லது நீண்ட கால அழுத்தத்தின் காரணமாக குருதியைக் கடத்தும் வால்வுகளின் இயல்பு நிலை பாதிக்கப்படுகின்றது. இதனால் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு நாளங்களில் புடைப்புத் தன்மையினை ஏற்படுத்துகின்றது. இதுவே வெரிகோஸ் வெயின் ஆக உருவெடுக்கின்றது. வெரிகோஸ் வெயின் கரு நீலம் அல்லது நாவல் நிறத்தில்க் காணப்படும்.

இது ஆண், பெண் இருபாலருக்கும் ஏற்படக்கூடிய நோய் எனிலும் பெண்களிடத்திலேயே பொதுவாகக் காணப்படும். பரம்பரைக் காரணிகளுடன் சேர்ந்து வயது, அதிக உடற்பருமன், கர்ப்பிணிக் காலம், நீண்ட நேரம் நிற்பது, உடற்பயிற்சி போதாமை, தொழிலின் இயல்பு, மாதவிடாய் நிறுத்தம், வயிற்றில் நீர்க் கோப்பு போன்ற மருத்துவ காரணங்களினாலும் ஏற்படும்.

வெரிகோஸ் வெயின் வலியை ஏற்படுத்தக்கூடியது. மேலும், கால்களில்ப் பாரமான உணர்வு, எரிவுத் தன்மை, கடி, தசைப் பிடிப்பு, பாதங்களில் வீக்கம், குத்துவது போன்ற உணர்வு என்பனவும் காணப்படலாம். இதனால் முக்கியமாகக் காலின் அழகு பாதிக்கப்படும்.

இங்கு வலியானது நீண்ட நேரம் நிற்பதால் அதிகரிக்கக் கூடும். மேலும், கால்களை உயர்த்தி ஓய்வில் வைப்பதன் மூலம் குறையும். வெரிகோஸ் வெயின் பொதுவான நோய் எனினும், நடக்க முடியாமை, சிறிய தாக்கங்களின் போது அதிக இரத்தப் போக்கு, வெரிகோஸ் காயங்கள் போன்ற சிக்கல்களையும் ஏற்படுத்தக் கூடியது.

இவ் வெரிகோஸ் வெயினைத் தவிர்த்திட அதன் மேல் ஏற்படுத்தப்படும் அழுத்தத்தினைக் குறைத்திட வேண்டும். இதற்காக வேலை செய்யும் பொழுது அல்லது நிற்கும் பொழுது வெரிகோஸ் காலுறைகளை அணிய வேண்டும். மேலும், அமரும் பொழுது அல்லது உறங்கும் பொழுது தலையணைகளை வைத்து கால்களை சிறிது உயர்த்தி வைக்கவேண்டும். கால்களிற்கான சீரான இரத்த ஓட்டத்தை வழங்கிட கால்களிற்கு உடற்பயிற்சிகள் வழங்கிட வேண்டும். அனைத்திற்கும் மேலாக அதிக நேரம் நிற்பதைத் தவிர்த்திட வேண்டும். 

வெரிகோஸ் வெயினிற்கான சிறந்த தீர்வுகள் ஆயுர்வேத சிகிச்சை மருத்துவத்தில்க் காணப்படுகின்றது. பலவிதமான உள்ளக மற்றும் வெளியக சிகிச்சைகள் உள்ளன . உள்ளக மருந்துகளாக கசாயம், க்வாதம், அரிஸ்டம், ஆசவம், கல்கம், குளி, சூரணம் போன்றவை உண்டு. ஜலௌகாசரண எனப்படும் அட்டையின் பாவனை ஆயுர்வேதத்தில் வெரிகோஸ் வெயினிற்கான மிகச் சிறந்த வெளியகத் தீர்வாகத் திகழ்கின்றது. இங்கு அட்டையானது அதன் மருத்துவ குணங்களின் அடிப்படையில்த் தெரிவு செய்யப்படும். இதைத் தவிர , லேபம், சிரா வேதனம், அப்யங்கம் போன்ற பல வெளியக சிகிச்சை முறைகளும் காணப்படுகின்றன.

சத்திர சிகிச்சை எதுவும் இன்றி இன்றே வெரிகோஸ் வெயினை ஆயுர்வேத சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திடுவோம்.

Leave a Reply