அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
சிலோன் ஹோலிஸ்டிக் சிகிச்சை தளம் என்றால் என்ன?
சிலோன் ஹோலிஸ்டிக் சிகிச்சை தளம் என்பது இலங்கையில் ஹோலிஸ்டிக் மருத்துவ முறைகளுக்கு மெய்நிகர் உதவிகளை(Vertual assistance) வழங்கும் முன்னோடி டிஜிட்டல் தளம் ஆகும். இச் சிகிச்சை தளமானது உலகெங்கிலும் உள்ள எந்த இடத்திலிருந்தும் அணுகக்கூடிய வகையிலும் இலங்கையின் தகுதிவாய்ந்த ஆயுர்வேத மருத்துவர்கள், பாரம்பரிய மருத்துவர்கள், சித்த மருத்துவர்கள், யுனானி மருத்துவர்கள் மற்றும் பிற மருத்துவ நிபுணர்களை அணுகவும் அவர்களுக்குரிய தனித்துவமான மூலிகை மருத்துவ முறைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. முழுமையான நல்வாழ்வு என்பது உடல் ஆரோக்கியம், மன / உளவியல் ஆரோக்கியம் மற்றும் ஆன்மீக ஆரோக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம்.
ஆன்லைன் ( நிகழ்நிலை ) மருத்துவர் ஆலோசனை அல்லது ஆன்லைன் மருத்துவ ஆலோசனை என்றால் என்ன?
ஆடியோ ( கேட்பொலி ) / வீடியோ ( காணொலி ) / அரட்டை மூலம் உங்கள் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து மருத்துவரிடம் கலந்துரையாடுதல் ஆன்லைன் மருத்துவர் ஆலோசனை அல்லது ஆன்லைன் மருத்துவ ஆலோசனை என அழைக்கப்படுகிறது. உங்களால் வைத்திய நிலையத்திற்கு அல்லது வைத்தியசாலைக்கு செல்ல முடியாத சந்தர்ப்பங்களில் ஆன்லைன் மருத்துவ ஆலோசணை ஒரு சிறப்பான மாற்று வழியாக அமையும். ஆன்லைன் மூலம் வைத்தியரிடம் கலந்துரையாடுவது வைத்தியசாலைக்கு சென்று மருத்துவரிடம் கலந்துரையாடுவதைப் போலவே செயற்படுத்தப்படுகின்றது. வைத்தியசாலைகளில் கலந்துரையாடலின் பின்னர் மருந்து ச் சீட்டினை பெறுவதைப் போலவே ஆன்லைன் கலந்துரையாடலின் பின்னரும் மருந்துச் சீட்டினை பெற்றுக்கொள்ள முடியும். சிலோன் ஹோலிஸ்டிக் தளத்தினூடான ஆன்லைன் மருத்துவ ஆலோசனையின் போது உங்கள் வசதிக்கேற்ப மருத்துவரை அணுக முடிவதுடன் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மெய்நிகர் மூலிகை மருந்தகத்தில் ( Vertual herbal pharmacy ) பெற்றுக்கொள்ள முடியும்.
ஆயுர்வேதம் உள்ளிட்ட ஹோலிஸ்டிக் / மாற்று / ஒப்பீட்டு மருத்துவ முறைகளிற்கு ஆன்லைன் ஆலோசனை எவ்வாறு செயல்படுகிறது?
திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் எப்போதும் நோய்களைக் கண்டறிய பல முறைகளைப் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக ஹோலிஸ்டிக் மருத்துவ முறைகளில் நோய் நிலைமையுடன் நோயாளியின் முழு உடலும் பரிசோதிக்கப்படுகிறது. நோயாளிகளின் அறிகுறிகள், அடையாளங்கள் மற்றும் மருத்துவ வரலாறு மூலம் நோய் நிலைமையானது உறுதி செய்யப்படுகின்றது.. சிலோன் ஹோலிஸ்டிக் சிகிச்சை தளத்தினூடாக நவீன தொழில்நுட்பங்கள் மூலமாக விரைவு படுத்தப்பட்ட முறைகளில் முற்றிலும் தனிப்பயனாக்கப்பட்ட மூலிகை மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
சிலோன் ஹோலிஸ்டிக் சிகிச்சை தளம் வழங்கும் சேவைகள் யாவை?
சிலோன் ஹோலிஸ்டிக் சிகிச்சை தளம் மூலமாக உலகெங்கிலும் உள்ள ஹோலிஸ்டிக் / மாற்று / ஒப்பீட்டு மருத்துவத்தினை விரும்பும் பயனாளிகள் மருத்துவர் மற்றும் மருத்துவ வல்லுநர்களை அணுக மெய்நிகர் டிஜிட்டல் தளத்தை வழங்கவதுடன் நோயாளிகள் சிறந்த மருத்துவர்களிடமிருந்து உதவியைப் பெறுவதற்கு உதவுகின்றோம். ஆன்லைன் ஆலோசனைகளின் பின்னர் , பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் , ஊட்டச்சத்து மருந்துகள் மற்றும் பிற மூலிகை பொருட்கள் வீட்டிற்கே விநியோகிக்கப்படுகின்றன. ஆன்மீக நடைமுறைகள், உணவு , ஊட்டச்சத்து மற்றும் மூலிகைகள் மூலமான அழகு பராமரிப்பு பற்றிய சிறந்த வழிகாட்டுதல்களையும் இந்த தளத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.
உங்கள் சந்திப்பினை முன்பதிவு செய்வது எப்படி?
1.வலது மேல் மூலையில் உள்ள “Appoinment” (சந்திப்பு) பொத்தானை அழுத்தவும். 2. மருத்துவர் , திகதி, நேரம் மற்றும் சேவையைத் தெரிவு செய்யவும். 3. “Book appoinment” (சந்திப்பு முன்பதிவு) பொத்தானை அழுத்தவும். 4. ‘Register” பொத்தானை அழுத்தி, வெற்றுப் பெட்டிகளை நிரப்பி பதிவு செய்யவும். 5. உங்கள் மின்னஞ்சலினை சரிபார்த்து நுழைவு விவரங்களுடன் உள்நுழையவும். 6. முன்பதிவு செய்வதற்கான கட்டணத்தை செலுத்தவும்.
எனது தனிப்பட்ட மற்றும் மருத்துவ தரவுகளுக்கான பாதுகாப்பு என்ன?
உங்கள் எல்லா தரவுகளும் குறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன, நீங்கள் கலந்துரையாடும் மருத்துவருக்கு மட்டுமே உங்கள் கோப்புகளை அணுக முடியும். எங்கள் நோயாளிகளின் தனியுரிமை எங்களுக்கு மிகவும் முக்கியமானது, நாங்கள் தொழில் தரங்களுக்கு இணங்கி செயல்படுகிறோம். ஒரு மருத்துவருடனான உங்கள் ஆன்லைன் ஆலோசனை முற்றிலும் பாதுகாப்பானது என்பதனையும் தரவுகள் 256-பிட் குறியாக்கத்துடன் பாதுகாகாக்கப்படுகின்றது என்பதனையும் உறுதிப்படுத்துகின்றோம்.
எனது தனிப்பட்ட சுகாதார தகவல்கள் எவ்வாறு சேமிக்கப்படுகின்றன?
சட்ட கட்டமைப்பிற்கு அமைவாக சந்திப்பு தொடர்பான மற்றும் மருத்துவ பதிவுகள் தொடர்பான அனைத்து தகவல்களும் கடுமையான இரகசியத்தன்மையுடன் பேணப்படுகின்றன . உங்கள் நோயாளி சுயவிபரத்தில் நீங்கள் புதுப்பிக்கும் தகவல்களையும் , ஆலோசனை மருத்துவர்கள் வழங்கிய மருந்துச் சீட்டுகளையும் மட்டுமே பார்வையிட முடியும். அவற்றை “My appoinments” (எனது சந்திப்பு) இல் பார்வையிட முடியும்.
உங்கள் ஆன்லைன் மருத்துவர்கள் தகுதியுள்ளவர்களா?
இலங்கை ஹோலிஸ்டிக்கில் ஆன்லைன் மருத்துவ சேவைகளை வழங்கும் ஒவ்வொரு மருத்துவரினதும் விபரங்கள் கண்டிப்பான முறையில் சரிபார்க்கப்பட்டு உறுதிப்படுத்தப்படும் செயல்முறையை நாங்கள் பின்பற்றுகிறோம். ஒவ்வொரு மருத்துவரிற்கும் தேவையான ஆவணங்கள், பதிவுகள் மற்றும் சான்றிதழ்களை எங்கள் குழு சரிபார்க்கின்றது. எங்களிடம் அரசாங்க பதிவு பெற்ற தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் உள்ளனர்.
கட்டணம் செலுத்தும் முறைகள் என்ன?
விசா (Visa), மாஸ்டர்கார்டு (Master cards), அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் (American express) மற்றும் பிற ஆன்லைன் மூலம் கட்டணத்தினை செலுத்தக்கூடிய அட்டைகளை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்.
ஆன்லைன் கட்டணத்தின் பாதுகாப்பு என்ன?
எல்லா தரவுகளும் குறியாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன.
ஆன்லைன் மருத்துவ ஆலோசனையின் பின்னர் மருந்துச் சீட்டினை பெற முடியுமா?
உங்கள் ஆன்லைன் மருத்துவ ஆலோசனையின் பின்னர், உங்கள் நோய்நிலைக்கேற்ப மருந்தினை உங்கள் மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைப்பார். உங்களின் நிலைக்கான முழுமையான மற்றும் துல்லியமான நோய் நிர்ணயத்தினைப் பெற, பரிசோதனைகள் மற்றும் சுகாதார பரிசோதனைகளையும் மருத்துவர் பரிந்துரைக்கலாம்.
மெய்நிகர் ஆலோசனை பெற எனக்கு என்ன தேவை?
வீடியோ ஆலோசனையைப் பெற, கேமரா ( Camera ) வசதி கொண்ட கணணி ( Computer) அல்லது மடிக்கணணி ( Laptop ),டேப்லெட் ( Tablet ) அல்லது ஸ்மார்ட் கையடக்க தொலைபேசி (Smart phone) மற்றும் இணைய வசதி உங்களுக்குத் தேவைப்படும். நீங்கள் Dataவைப் பயன்படுத்தலாம், ஆனால் WiFi உங்களுக்கு சிறந்த அழைப்பு தரத்தை வழங்கும்.
ஒவ்வொரு தடவையும் ஒரே வைத்தியரை அணுக முடியுமா ?
எங்களின் தொடர்புடுத்தல் முறையானது வைத்தியரின் இருப்பிற்கு அமைய உறுதிசெய்யப்படும். எனவே ஒவ்வொரு முறையும் ஒரே மருத்துவரை நீங்கள் அணுகுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகும். நிபுணர்களில் சிலர் முன்பதிவு செய்யப்பட்ட சந்திப்புகளின் மூலம் தொடர்ந்து கவனிப்பை வழங்குகிறார்கள். நீங்கள் அதே மருத்துவரிடம் தொடர முடியும் அல்லது உங்கள் தேவையைப் பொறுத்து புதிய மருத்துவரை அணுக முடியும்.
டெலிமெடிசின் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட நடைமுறையா?
நிச்சயமாக. உரை, ஆடியோ மற்றும் வீடியோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சுகாதாரம் மற்றும் சுகாதாரம் தொடர்பான பிற சேவைகளை வழங்குவதே டெலிமெடிசின் ஆகும். இதன் மூலமாக வைத்தியர்களும் நோயாளிகளும் ஒரே இடத்தில் இல்லாத சந்தர்ப்பங்களிலும் சிகிச்சை அளிக்க முடியும்.
என்னால் மருத்துவரின் குறிப்பைப் பெற முடியுமா?
நிச்சயமாக. உங்கள் வேண்டுகோள் மற்றும் தேவையின் அடிப்படையில், , ஜூமில் (Zoom) டிஜிட்டல் நோய் குறிப்பை உங்களுக்கு எழுதுவதில் எங்கள் மருத்துவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள், அது அவர்களின் லெட்டர்ஹெட்டில் எழுதப்படும். மேலும் நீங்கள் எதிர்பார்க்கும் மேலதிக தேவைகளுக்காக [email protected] வழியாக எங்களை தொடர்பு கொள்ளலாம்
எனது விலைப்பட்டியலை எவ்வாறு பெறுவது?
பயனர் பரிவர்த்தனை பக்கத்திலிருந்து (Transection page) அவர்கள் பதிவுசெய்யப்பட்ட மின்னஞ்சலிற்கு விலைப்பட்டியல் அனுப்பப்படும். மாற்றாக, பயனர் பரிவர்த்தனை பக்கத்திலிருந்து (Transection page) அவர்கள் செலுத்திய அனைத்து கொடுப்பனவுகளிற்குமான விலைப்பட்டியலைப் பதிவிறக்க முடியும்.
எனது அவசரகால சூழ்நிலைகளை சிலோன் ஹோலிஸ்டிக் மருத்துவர்கள் கையாள முடியுமா?
சிலோன் ஹோலிஸ்டிக் அவசரமற்ற மருத்துவ சிக்கல்களைக் கையாள வடிவமைக்கப்பட்டுள்ளது. நீங்கள் மருத்துவ அவசரநிலையை சந்தித்தால் சிலோன் ஹோலிஸ்டிக் தளத்தினைப் பயன்படுத்தக்கூடாது.
சந்திப்பை எவ்வாறு ரத்து செய்வது?
கட்டணம் ரத்து செய்யப்பட்டால், பயனர்கள் [email protected] எனும் மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் அல்லது எங்கள் சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி எண் மூலம் எங்களை தொடர்பு கொள்ளவும். ரத்துசெய்யும் கொள்கையின் மூலமாக கட்டணம் திருப்பித் தரப்படும்.
உங்கள் சேவை திருப்தி உத்தரவாதம் அளிக்கிறதா?
ஆம்! எங்கள் சேவை முழு திருப்தி உத்தரவாதத்துடன் வழங்கப்படுகிறது, மேலும் மகிழ்ச்சியான வாடிக்கையாளர்கள் இல்லாமல் எங்கள் சேவையைத் தொடர முடியாது. எங்கள் சேவையில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை என்றால், எந்த காரணத்திற்காகவும், எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழுவை [email protected] வழியாக தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம்.
எனது மருத்துவரிடம் நான் மகிழ்ச்சியடையவில்லை என்றால் என்ன செய்வது?
உங்கள் மருத்துவரிடம் நீங்கள் அதிருப்தி அடைந்தால், தயவுசெய்து எங்கள் வாடிக்கையாளர் ஆதரவு குழுவை [email protected] வழியாக தொடர்பு கொள்ளவும், அவர்கள் உங்கள் எல்லா பிரச்சினைகளையும் நிச்சயம் தீர்ப்பார்கள்.
எனது கடனட்டை /வரவட்டை தகவல் பாதுகாப்பானதா?
நிச்சயமாக! உங்கள் அட்டை விவரங்கள் எங்கும் சேமிக்கப்படாது. உங்கள் அட்டை தகவல் செயலாக்க மத்திய வங்கியின் இலங்கையின் பாதுகாக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்டண நுழைவாயிலுக்கு செல்கிறது.
எனது கடவுச்சொல்லை எவ்வாறு மீட்டமைக்க முடியும்?
உங்கள் கடவுச்சொல்லை மீட்டமைக்க வேண்டுமானால், கடவுச்சொல் மீட்டமைப்பு விருப்பத்தைப் பயன்படுத்தி அவ்வாறு செய்யலாம்.
எனது இணைப்பு மிகவும் சிறப்பாக இல்லை. என்னால் என்ன செய்ய முடியும்?
Wifi ஐ பயன்படுத்த நாங்கள் பரிந்துரைக்கிறோம். இது உங்கள் இணைப்பின் வேகத்தையும் உங்கள் அனுபவத்தின் தரத்தையும் பெரிதும் மேம்படுத்தலாம். SETTINGS க்குச் சென்று WIFI ஐத் தேர்ந்தெடுப்பதன் மூலம் நீங்கள் பெரும்பாலான தொலைபேசிகளில் WIFI ஐ இயக்கலாம்.